நயன்தாராவும் இல்லை, த்ரிஷாவும் இல்லை: அஜித்-விக்னேஷ் சிவன் படத்தில் நாயகி இவர்தான்!

வியாழன், 5 ஜனவரி 2023 (17:28 IST)
அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நயன்தாராவும் நடிக்கவில்லை த்ரிஷாவும் நடிக்கவில்லை என்றும் அஜீத் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே அஜித் நடித்த ’விவேகம்’ என்ற திரைப்படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த நிலையில் தற்போது மீண்டும் அவருடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்