’துணிவு’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த போனிகபூர்!

புதன், 4 ஜனவரி 2023 (19:01 IST)
அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டாலும் சரியான ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
 
சமீபத்தில் வெளியான டிரெய்லரில் கூட துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வில்லை என்பதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் ஒரு சிலர் துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என்றும் சிலர் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் சற்று முன்னர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
 
இதனை அடுத்து அஜீத் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதால் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்