தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.
மே 10 ஆம் தேதி ரிலீஸாக உள்ள அந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தபோது அதில் ஜோதிகா கலந்துகொண்டார். அப்போது சூர்யாவுடன் இணைந்து நடிப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “சூர்யாவுடன் இணைந்து நடிக்க நல்ல கதை அமைய வேண்டும். அதற்காக 10 ஆண்டுகளாக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.