5 ஆண்டுகளுக்குப் பின் ரி எண்ட்ரி கொடுக்கும் ஜீவன் – 3 வேடங்களில் நடிக்கும் பாம்பாட்டம்!

சனி, 12 டிசம்பர் 2020 (17:21 IST)
நடிகர் ஜீவன் மூன்று வேடங்களில் நடிக்கும் பாம்பாட்டம் எனும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருட்டுப் பயலே மற்றும் நான் அவன் இல்லை ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜீவன். இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக வர தொடங்கின. ஆனால் அந்த படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றி பெறாததால் அவர் கடந்த 5 ஆண்டுகளாக சினிமா வாய்ப்பில்லாமல் இருந்தார்.

இந்நிலையில் இப்போது ரீ எண்ட்ரி கொடுக்கும் விதமாக பாம்பாட்டம் எனும் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்