இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீசாகி கவனம் பெற்றது. இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் அர்ஜுனன் “வன்முறை, ரத்தம், போதை இதெல்லாம் இல்லாமல் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக ஜீனி இருக்கும். குறிப்பாக பெண் கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். படத்தில் க்ரீத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர்.