இந்த நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களுக்கு அவுட்லுக் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே அவர் வெளிநாடு செல்லக் கூடாது என்றும் தடுத்து நிறுத்தினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து துபாய் பயணத்தை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு 10 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் சுகேஷ் என்பவர் யார் என்றே தனக்கு தெரியாது என ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியிருந்தார் என்பதும் அதற்கு அடுத்த இரண்டே நாட்களில் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலின் பெர்னாண்டஸ் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது