ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிம்புவும், ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக பத்திரிகையாளிடம் பதில் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கும், த்ரிஷாக்கும் ஆதரவாக பேசிய சிம்பு, “த்ரிஷா தெருநாய்க்கெல்லாம் தன் வீட்டில் இடம் கொடுத்தவர். அவரின் அந்த நல்லகாரியம் பற்றி யாரும் பாராட்டுவது இல்லை. அப்படி இருக்கும்போது இது குறித்து மட்டும் எப்படி கேட்க முடியும். பீட்டா ஜல்லிக்கட்டை எதிர்க்கும் என்று அவருக்கு எப்படி தெரியும். தெரிந்திருந்தால் த்ரிஷா அதற்கு ஆதரவு தெரிவித்திருக்க மாட்டார் என கூறினார்.