தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில், தமன்னா, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் தமன்னா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் பிரபல நடிகர் ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் மீடியாவில் கசிந்த நிலையில், லஸ்ட் ஸ்டோரிஸ் -2 என்ற வெப் சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்ததற்காக இவர் மீது விமர்சனங்கள் வலுத்தது.
தற்போது வெப் சீரிஸில் நடிப்பதுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர் என்ற படத்திலும் நடித்து வரும் நிலையில், இப்படத்தில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்துள்ளதாகவும், ஆனால், தற்போது வெளியாகியுள்ள வெப்சீரிஸில் இதற்கு நேர்மாறாக கவர்ச்சியில் நடித்துள்ளதால், ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.