"ஜகமே தந்திரம்" தனுஷ் 40 பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்...!

புதன், 19 பிப்ரவரி 2020 (17:27 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனுஷ்40 படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்றது. சுருளி என்ற பாத்திரத்தில் தனுஷ் நடிப்பதால் இதன் டைட்டில் சுருளி என்று கூறப்படுகிறது. அத்துடன் தனுஷ் கிடா மீசையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
 
இந்நிலையில் தற்போது மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். cast and crew டீட்டைளுடன் வந்துள்ள இந்த படத்தின் டைட்டில் "ஜகமே தந்திரம்" என பெயர் வைத்துள்ளனர்.  வேட்டி சட்டை அணிந்து ட்ரெரிஃபிக் லுக்கில் துப்பாக்கியை வைத்து ஹீரோயிசம் செய்கிறார் தனுஷ். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும்,  இப்படம் மே 1ம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்