விஷால் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ‘ஆக்சன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ளதாகவும், இந்த படம் ‘துப்பறிவாளன் 2’ என்றும் கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த தகவல் உறுதி செய்துள்ளது
இன்று விஷால், விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி, மிஷ்கின் ஆகியோர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இசைஞானியும் அதற்கு ஒப்புக்கொண்டதை அடுத்து அட்வான்ஸ் பணம் வழங்கப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதனையடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தில் இசைஞானி இசையமைக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘துப்பறிவாளன் ’ முதல் பாகத்தில் அரோல் கரோலி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது