"ஆக்ஷனில்" அதிரடி காட்டும் விஷால் - மிரட்டலான புதிய போஸ்டர்!

வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (14:56 IST)
ஆம்பள படத்தின் வெற்றிக்கும் பிறகு இயக்குனர் சுந்தர் சி மீண்டும் நடிகர் விஷாலை வைத்து புது படமொன்றை இயக்கி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தில்  ஐஸ்வர்யா லட்சுமி , யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் படத்தின் வில்லனாக  வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடிக்கிறார். 


 
இப்படத்திற்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதி தான் மீண்டும்  இசையமைக்கிறார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்ள்ளது.  படத்தை பற்றி எந்த விதமான புதிய அப்டேட்டுகளும் கொடுக்காமல் இருந்து வந்த படக்குழுவினர் தற்போது டபுள் தமாக்கவாக படத்தில் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 


 
சுந்தர்.சி - விஷால் கூட்டணியின் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு "ஆக்ஷன்"  என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வேகமெடுத்து வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்