ராய் லட்சுமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன்.
மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. நான் ஒல்லியாக இருப்பதால் அவை கை நழுவிப் போனது. ஜூலி 2 படத்திற்காக உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியால் மீண்டேன். இதனால் படப்பிடிப்பு தாமதமானது என்று கூறினார் ராய் லட்சுமி.