இந்நிலையில் கமல்ஹாசனுக்காக ஹெச் வினோத் உருவாக்கியுள்ள கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வினோத், சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களும் உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் படத்துக்கு முன்பாக ஹெச் வினோத் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ள நிலையில், இந்த படத்தில் தனுஷ் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.