சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், விஜய் சேதுபதிக்கு விருது!

வியாழன், 22 டிசம்பர் 2022 (21:46 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக சர்வதேச திரைப்பட விழா நடந்த நிலையில் இந்த விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது 
 
இந்த நிலையில் இந்த விழாவில் விஜய் சேதுபதிக்கு மாமனிதன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது. 
 
தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை சென்னை சர்வதேச திரைப்பட கமிட்டிக்கு நன்கொடையாக விஜய் சேதுபதி வழங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சிறந்த படங்கள் எல்லோராலும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் 50 வருடங்கள் வாழ்ந்த மனிதனின் கதையை இரண்டரை மணிநேரத்தில் சொல்ல முடியும் என்றும் எனவே படத்தை விமர்சனங்களால் மட்டும் பார்க்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்