நடிகர் விஷால் 40 வயதுக்கு மேலாகியும் தனது உடலை எப்போதும் பிட்டாக வைத்திருப்பார். அவரின் இந்த உடலைப் பேணும் பழக்கம் அவரின் தந்தை ஜி கே ரெட்டியிடம் இருந்து கற்றுக்கொண்டது என அவர் கூறியுள்ளார். இப்போது 82 வயதாகும் ஜி கே ரெட்டி இன்னும் தனது உடலைக் கச்சிதமான வடிவத்தில் வைத்துள்ளார். இதனால் அவர் இப்போது பிட் இந்தியா என்ற அமைப்பின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.