தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அவர், இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். மெலும் ஆந்திராவில் அரசியலிலும் ஈடுபட்டார். சமீபத்தில் YSR காங்கிரஸ் வெற்றி பெற்று ஆந்திராவில் ஆட்சி நடத்தி வருகின்றது. இதில் ரோஜாவும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியுள்ள நிலையில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடிகை ரோஜாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இ ந் நிலையில், ஆ ந் திர மா நில மீன்வளத்துறை சார்பில், திருப்பதி மாவட்டம் வடமாலா பேட்டையில் இன்று அரசு சில்லறை மீன் விற்பனை மையத்தை திறந்து வைத்த அமைச்சரும், நடிகையுமான ரோஜா,இந்தியாவின் மீன் ஏற்றுமதியில் சுமார் 40% ஆந்திராவில் இருந்து தான் ஏற்றுமதி ஆகிறது. மீன் உற்பத்தியாளர், மீன் வளர்ப்பு தொழில் வல்லுநர், நுகர்வோர் ஆந்திர மா நில அரசு மூலம் பயன் அடைந்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
மேலும், மீன் குழம்பு உடலுக்கு நல்ல ஆரோக்கியம் எனவும், பொதுமக்கள் அதிகம் மீன் சாப்பிடலாம் எனத் தெரிவித்தார்.