அமைச்சரான நடிகை ரோஜாவுக்கு என்ன துறை தெரியுமா? முதல்வர் அறிவிப்பு!

திங்கள், 11 ஏப்ரல் 2022 (17:11 IST)
ஆந்திர சட்டசபையில் இன்று 14 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்ற நிலையில் அதில் நடிகை ரோஜாவும் அமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
முதல்வர் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த துறையில் அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்றும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த பல ஆண்டுகளாக ஆந்திர அரசியலில் இருந்து வரும் நடிகை ரோஜாவுக்கு தற்போது அதற்கு உரிய கவுரவம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்