திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 3 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தி விட்டதாகவும், அவருடன் இருக்கும் ஏராளமான உதவியாளர்களுக்கும் நாங்களே சம்பளம் வழங்க வேண்டியுள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒரு படத்திற்கு மட்டும் நயன்தாராவின் உதவியாளர்களுக்கு ரூ.50 லட்சம் அல்லது ரூ.1 கோடி என்று கூடுதலாக கொடுக்க வேண்டி உள்ளது என்று தெரிவித்தனர்.
நடிகர் சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் தங்களின் உதவியாளர்களுக்கு தாங்களே சம்பளம் அளிக்க முன்வந்ததைப்போல, நடிகை நயன்தாராவும் அவரது உதவியாளர்களின் சம்பளத்தை ஏற்றுக் கொண்டால் தங்களுக்கு பாரம் குறையும் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.