இந்தப் படத்தை முத்தையா இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அவர் சூர்யா படத்தை இயக்குவதில் தீவிரமாக உள்ளார். ஆகவே, இலவச படம் என்னவாயிற்று என்று விஷாலிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த விஷால், முன்னணி நடிகர்களை வைத்து ஒரு படம் எடுத்து, அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட உள்ளோம். அது தொடர்பான முக்கிய அறிவிப்பை தீபாவளிக்கு வெளியிட உள்ளோம் என்றார்.