தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். ஐம்பது ஆண்டுகளாகச் சினிமாவில் இருந்தாலும் இன்னும் புதிய சிந்தனைகள்,கருத்துகளுடன் மக்களின் ஹீரோவாக அறியப்படுகிறார். அவரது படைப்புகளும் சிலாகித்துப் பேசப்படுகிறது.
இப்படத்தில் அஞ்சாதே, தம்பிக்கோட்டை, கைதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த மலையாள நடிகர் நரேன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் இன்று விக்ரம் பட ஷூட்டிங்கில் நரேன் கலந்துகொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.