சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட்சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (18:30 IST)
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் உள்ளார்
இந்த நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தை வரும் பொங்கல் திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியையும் புரமோஷன் பணியையும் ஒருங்கே செய்து வருகின்றனர்
ஏற்கனவே ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சற்றுமுன் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஈஸ்வரன் படத்தின் பாட்டு சிங்கிள் பாடல் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் டிசம்பர் 14ஆம் தேதியை நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது