“இயக்குநர் குகன் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது கதையின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, தெளிவு மற்றும் சரியான நோக்கம் இதையெல்லாம் என்னால் உணர முடிந்தது. இந்தக் கதையில் ஒரு வலுவான கதாபாத்திரத்திற்காக அவர் என்னை அணுகியது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், இந்த கதாபாத்திரத்தை பல முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்புவார்கள் என்பது எனக்குத் தெரியும். கதை மிகவும் உறுதியானதாக இருக்கும்போது நடிகர்களின் நடிப்புத் திறன் இன்னும் சிறப்பாக வெளிப்படும் என்பதை வெப்பன் நிரூபித்துள்ளது.