ஹீரோ ஆகிறார் பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்: டீசரை வெளியிட்ட பிரபல நடிகை!

புதன், 12 ஜனவரி 2022 (18:01 IST)
ஹீரோ ஆகிறார் பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்: டீசரை வெளியிட்ட பிரபல நடிகை!
இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதர்வா முரளி நடித்த பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பத்ரி வெங்கடேஷ். அதன் பின்னர் செம போத ஆகாதே, பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்
 
இந்த நிலையில் தற்போது பத்ரி வெங்கடேஷ் ஹீரோவாக உள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது என்பதும் இந்த டீசரை பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சைமன் கிங் என்பவர் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் பத்ரி வெங்கடேஷ் அவரே இயக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Souls seldom die nor lie! Announcing @dirbadri 's next #BadriVenkatesh4 with a teaser shot before the actual shoot! Badri Venkatesh directs and acts in this psychological horror along with a plethora of actors.Music is by @simonkking @donechannel1https://t.co/ChwHWp7B1H pic.twitter.com/RdcOodUwcO

— shruti haasan (@shrutihaasan) January 12, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்