ஆனாலும் தற்போது போட்டியாளர்கள் நடுவே கோஷ்டி மோதல் சூடு பிடித்துள்ளது. தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பெயரில் நடந்து வரும் பொம்மை டாஸ்க்கில் அசீம் பக்கம் ஒரு அணியாகவும், தனலெட்சுமி, ஷிவின் போன்றவர்கள் இணைந்து ஒரு அணியாகவும் செயல்படுகின்றனர்.
மற்றவர்கள் பொம்மையை ஸ்லாட்டில் வைக்கவிடாமல் செய்ய எல்லா சூழ்ச்சிகளும் நடக்கின்றன. நேற்றே ஷிவினின் பொம்மையை மகேஸ்வரியும், மகேஸ்வரியின் பொம்மையை தனலெட்சுமியும் எடுத்து வைத்துக் கொண்டு ஸ்லாட்டில் வைக்காமல் சண்டை போட்டது சர்ச்சையானது.
தனலெட்சுமி ஷெரினாவையும், நிவாவையும் கீழே தள்ளிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அஸீம், தனலெட்சுமி இடையே வாக்குவாதமும் வலுத்துள்ளது. இந்த பரபரப்பான ப்ரோமோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.