ஏம்லே சீவன வாங்குறிய.. ஜி.பி.முத்துவுக்கு நேர்ந்த தொல்லைகள்! – பிக்பாஸ் முதல் நாள் ப்ரோமோ!

திங்கள், 10 அக்டோபர் 2022 (12:33 IST)
பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ள நிலையில் இன்று அதன் முதல் எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 5 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதன் முதல் நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

ALSO READ: ஆதாமா..? அப்டினா..? கமல்ஹாசனை கலங்கடித்த ஜி.பி.முத்து! – வைரலாகும் வீடியோ!

அதில் வழக்கம்போல பிக்பாஸ் வீட்டை பராமரிப்பதற்கான கிச்சன், வெசல், க்ளீனிங், பாத்ரூம் என நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவுக்கு கிச்சன் பாத்திரங்களை கழுவும் பணி தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் 5 பேர் இருக்கின்றனர்.

இதற்கிடையே இரவு தூங்கி கொண்டிருந்த ஜி.பி.முத்துவை ராபர்ட் மாஸ்டர் பதுங்கி சென்று காலில் சுரண்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜி.பி.முத்து படுக்கையிலிருந்து தவறி விழுந்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edited By: Prasanth.K

#Day1 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/CH5xflfXqw

— Vijay Television (@vijaytelevision) October 10, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்