இந்நிலையில் இது சம்மந்தமாக ஆய்வு நடத்த இடைக்கால நிர்வாகி சென்ற போது கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் இருப்பதாகவும், அதில் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு அந்த வீட்டை அபகரிக்க நடிகர் மன்சூர் அலிகான் முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்மந்தமாக அரசு சொத்தாட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவருக்கு எதிராக தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.