அஜித்துக்காக கெட்டப் மாறிய சிரஞ்சீவி.. வைரல் புகைப்படம்
புதன், 18 ஜனவரி 2023 (08:00 IST)
போலோ சங்கர் படத்திற்காக கெட்டப் மாறிய சிரஞ்சீவி
அஜித் நடித்த வேதாளம் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து செல்ல மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி ஒரு கேரக்டருக்காக மொட்டை போட்டு உள்ளார். மொட்டையுடன் உள்ள சிரஞ்சீவியின் புதிய கெட்டப் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்கள் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சிரஞ்சீவி ஜோடியாக தமன்னாவும் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படத்தை மகேஷ் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.