தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர், பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தெலுங்கில் உருவான ’மாகாநடி’ என்ற படத்தில் சாவித்ரி கதாப்பாத்திரத்தில் நடித்தற்காக மத்திய அரசால் அவருக்கு ’சிறந்த நடிகைக்கான ’தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல காமெடி நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், 'தேசிய விருது பெற்ற அன்பு தங்கச்சி கீர்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள்' எனப் பதிவிட்டு, இதை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.