ஆனால், நுகர்வு கலாச்சாரமும், கார்ப்பரேட் வணிகமும் கான் திரைப்பட விழாவிலும் ஊடுருவியுள்ளது. ஐஸ்வர்யா ராய், மல்லிகா ஷெராவத் போன்ற செலிபிரிட்டிகள்தான் ரெட்கார்ப்பெட் மரியாதையை கானில் பெறுகிறார்கள்.
ஐஸ்வார்யா ராய் கான் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பை பெறுவதற்கான ஆயுள்கால சந்தாவை பெற்றிருப்பார் போலுள்ளது. இந்த வருடமும் ஐஸ்வர்யா ராய் அழைக்கப்பட்டிருக்கிறார். உடன் செல்லும் இன்னொரு பாலிவுட் பிரபலம், சோனம் கபூர்.