இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. ஆனால் இந்தி மொழியில் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தியில் வெளியாக வேண்டுமென சமூகவலைதளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர். ஒருசிலர் மேலும் கோபமாகி “பாய்காட் கேப்டன் மில்லர்” என்ற ஹேஷ்டேக்கையும் பரப்பி வருகின்றனர்.