பாதாம் தெரியுது, ஆதாம் தெரியலையா? ஜிபி முத்துவை மிரட்டிய கமல்ஹாசன்!

சனி, 15 அக்டோபர் 2022 (15:35 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் முறையாக கமல்ஹாசன் தோன்றும் நிகழ்ச்சி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான வீடியோவில் கமல்ஹாசன் ஜிபி முத்துவை கலாய்க்கும் காட்சிகள் உள்ளன. முதலில் சாந்தியிடம், ‘வரும்போது சொல்லி அனுப்பினார்கள் கொஞ்சம் ஏமாந்த என்றால் உங்களுக்கு உப்புமா கொடுத்து விடுவார்கள் என்று கூறினார் 
 
இதனையடுத்து மகேஸ்வரியிடம் கூறிய கமல் ஹாசன், ‘அடிக்கடி முட்டிக்கிறிங்க போலிருக்கு, ஐ மின் கண்ணாடியில்’ என்று கூறுகிறார்
 
இதனையடுத்து ஜிபிவை எழுந்திருக்க கூறிய கமலிடம், பாதாம்பருப்பு சார் என்று ஜிபி முத்து கூற, ‘பாதாம் தெரியுது ஆதாம்தெரியவில்லையா? அங்கே ஆதாம் எவ்வளவு வருத்தப்படுகிறார் தெரியுமா? என்று கூற அதற்கு ஜிபி முத்து, ‘ஆதாமா? அவரு எங்க இருக்காரு? என்று அப்பாவியாக கேட்பதுடன் இன்றைய புரொமோ முடிவுக்கு வருகிறது.

Edited by Mahendran
 
 

#Day6 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/rT1UzlTCLX

— Vijay Television (@vijaytelevision) October 15, 2022
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்