தனது மகன் தங்கள் வீட்டுக்கு வராமல் உறவினர் வீட்டில் இருப்பதாகவும், நேரிலும் சரி, ஃபோனிலும் சரி தன்னிடம் பேசுவதில்லை என்றும், அவனைப் பார்த்து 4 மாதங்கள் ஆகிறது என்றும் கூறி கதறி அழுகிறார். இந்த நிகழ்ச்சியில் இதை சொல்லாவிட்டால், அம்மா படும் கஷ்டம் மகனுக்கு தெரியாமலே போய்விடும் என்பதால் தான் இங்கு வந்ததாகவும் கூறினார். தாமரை செல்வியின் சிரிப்பின் பின்னால் நிறைய சோகங்கள் இருக்கும் போல... நாம் முகம் எனும் மலர்ந்த தாமரையைப் பார்த்து மகிழ்கிறோம். ஆனால் அவர் மலர மனம் எனும் வேர்கள் படும் துன்பம் வெளியே தெரிவதில்லை.