தாமரை செல்வியின் கோபம் நியாயமானது... பவானிக்கு வலுக்கும் கண்டனம்!

புதன், 27 அக்டோபர் 2021 (13:21 IST)
பிக்பாஸ் வீட்டில் நாணயம் கடத்தல் டாஸ்கில் தாமரை செல்வியின் நாணயத்தை ஸ்ருதி நியாயமற்ற முறையில் திருடியதாக அவருக்கு வீட்டிலும் வெளியிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தாமரை குளித்துவிட்டு உடை மாற்றும்போது உதவிக்காக ஸ்ருதியை அழைத்தார்.
 
அந்த சமயம் பார்த்து ஸ்ருதி தாமரையின் நாணயத்தை திருடிவிட்டார். அது தாமரைக்கு தெரிந்தும் கத்தி கூச்சலித்து ஓடிவந்து நாணயத்தை கைப்பற்ற முடியவில்லை. காரணம் அவர் உடை அணியாமல் இருந்தார். அவர் துணி மாற்றும் நேரம் பார்த்து நாணயத்தை எடுத்த ஸ்ருதிக்கு ஆடியன்ஸ் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் ஸ்ருதிக்கு உதவி பாவினியை கமல் இந்த வாரம் நிச்சயம் கண்டித்தே ஆகவேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். எனவே இந்த வார இறுதியில் நடக்கப்போகும் பஞ்சாயத்தில் விஷ பாட்டில் பவானி சிக்குவார் என எதிர்பார்க்கலாம். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்