இந்த ப்ரோமோ வீடியோவில் கவின் , சாண்டி , முகன், அபிராமி உள்ளிட்டோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு உள்ளே இருக்கும் வனிதாவை கிண்டலடிக்கின்றனர். குறிப்பாக சாண்டி வனிதாவின் சைகைக்கு ஏற்றவாறு " பண்ணட்டும்... பண்ணட்டும் எவ்ளோவ் பண்ணினாலும் எனக்கு கவலை இல்லை. ஏன்னா நான் தான் டைட்டில் கார்ட் வின்னர்.. நான் தான் கப் எடுத்து போவேன் கமல் சாரே சொல்லிட்டாரு" என்று கூறி நக்கலடித்து கலாய்க்கிறார். அதற்கு உடனிருக்கும் லொஸ்லியா மற்றும் கவின் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.