இந்த ப்ரோமோ கொஞ்சம் ஃபன் கலந்து வெளியிட்டுள்ளனர். அதாவது வனிதாவை அவங்க வாத்துன்னு சொன்னது என் கோபமே கிடையாது என வனிதா ஆரம்பிக்க உடனே கஸ்தூரி , நான் அப்படி சொல்லவேயில்லை சார் என்று கூறுகிறார். பின்ன யாரை வாத்துன்னு சொன்னீங்க..? என்று கஸ்தூரியிடம் கமல் காட்டமான முகத்துடன் கேள்வி கேட்கிறார் . அதற்கு கஸ்தூரி " அது வாத்து பாடல் சார், வாத்தை தான் வாத்துன்னு சொன்னேன்" என்று கூறி மழுப்புகிறார்.
அதற்கு வனிதா " பயமா இருக்கு சார்.... என்று கூற உடனே கமல் பயப்படாதீங்க , அப்படியெல்லாம் பயப்படவே கூடாது என்று நக்கலாக கூறுகிறார். உடனே ஆடியன்ஸின் கைதட்டலால் அந்த அரங்கமே அதிர்கிறது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் பலரும் பயமா..? உனக்கா..? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு! என்று கூறி கலாய்த்து வருகின்றனர்.