சேலையில் சேர்ந்து ஆடும் பாவனா - சம்யுக்தா: செம கியூட் வீடியோ!
புதன், 9 ஜூன் 2021 (21:43 IST)
மாடல் அழகியான சம்யுக்தா சண்முகநாதன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்ளுக்கு நன்கு பரீட்சியம்னார். இவர் தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழி. அவர் கொடுத்த சிபாரிசின் அடிப்படையில் தான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 36 வயதாகும் இவருக்கு கார்த்திக் என்கிற கணவர் இருக்கிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், அம்மணி யங் மம்மியாக அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார்.
பிக்பாஸுக்கு பின்னர் சம்யுக்தா விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது தோழி பாவனாவுடன் சேர்ந்து கியூட்டாக நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.