இப்படங்களுக்கு அடுத்து, நடிகர் பிரபாஸ் நடித்த, ராதேஸ்யாம், ஷாகோ போன்ற படங்களில் பெரியளவில் ரசிகர்களைக் கவரவில்லை.
இந்த நிலையில் தற்போது, ஆதி புரூஸ், கே.ஜி;.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
இந்த நிலையில், பிரபாஸின் ஆதிபுருஸ் படம் ரூ.500 என்ற மெகா பட்ஜெட்டில் நடித்து வருகிறார். இதையடுத்து, சலார் என்ற படம் உள்ளிட்ட மொத்தம் 4 படங்களின் மொத்த பட்ஜெட் ரூ.2000 கோடியில் பிரபாஸ் நடித்து வருவது இந்திய சினிமா நட்சத்திரங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சில நடிகர்களின் படத்தின் பட்ஜெட் இன்னும் ரூ.200, மீறினால் பாலிவுட்டில் ரூ.400 கோடியைத் தாண்டாத நிலையில், பிரபாஸின் இந்த 4 பான் இந்தியா மற்றும் மெகா புராஜெக்ட்டுகள் அவரை உலக அளவில் பேச வைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.