மீண்டும் தயாரிப்பில் இறங்கும் ஐங்கரன் நிறுவனம்!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (15:59 IST)
ஐங்கரன் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வந்தார்.

ஐங்கரன் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்தது. விஜய் மற்றும் அஜித் ஆகியோர்களை வைத்து படங்களைத் தயாரித்தது. ரஜினியின் எந்திரன் திரைப்படத்தையும் ஐங்கரன் நிறுவனம்தான் தயாரித்தது. ஆனால் இடையில் அதை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குக் கைமாற்றியது. அதன் பின்னர் பெரிதாக எந்த படத்தையும் தயாரிக்க வில்லை.

இந்நிலையில் இப்போது அந்த நிறுவனத்தைச் சேர்ந்த கருணாகரன் புதிதாக 6 படங்களை தயாரிக்க உள்ளார். அதில் 3 படங்கள் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்