வெற்றிமாறன் படத்துக்கு இசையமைப்பாளரான எஸ் எஸ் தமன்!

திங்கள், 19 ஜூலை 2021 (10:28 IST)
ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் அதிகாரம் என அறிவிக்கப்பட்டது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் டைட்டில் அதிகாரம் என சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் கதை வசனத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிகாரம் படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் லூக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் அதிகாரம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக இப்போது எஸ் எஸ் தமன் அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கமாக வெற்றிமாறன் பங்கேற்கும் படங்களுக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பார். ஆனால் இந்த படம் தெலுங்கிலும் உருவாவதால் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்