வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்!

சனி, 17 ஜூலை 2021 (10:24 IST)
சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் முதல் லுக் நேற்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்கு பின்னர் வாடிவாசல் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. நேற்று அதன் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இப்போது படத்தை பற்றிய மற்றுமொரு அப்டேட் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் இயக்குனர் அமீர் நடிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்