வாட்ஸ் அப்பில் ஹீரோவாக எம்.ஜி.ஆரின் பேரன்

சனி, 21 அக்டோபர் 2017 (16:44 IST)
ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் எஸ்பிகே பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் மற்றும் செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக  நடிக்கிறார்.

 
மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா  விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன். இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான். இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார்.
 
இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் ஜேவி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்  பின்னணியில் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
 
வரும் நவம்பர் 15ஆம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. உடுமலை, பொள்ளாச்சி, மூணாறு மற்றும் சென்னை ஆகிய  பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்