பாலா இயக்கத்தில் சூர்யா – ஆர்யா & அதர்வாவும் உள்ளே !
புதன், 25 செப்டம்பர் 2019 (13:39 IST)
பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யாவோடு ஆர்யா மற்றும் அதர்வாவும் நடிக்க இருக்கின்றனர்.
சமீபகாலமாக பாலா இயக்கும் படங்கள் எதுவும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தாக்கம் செலுத்துவதில்லை. கடைசியாக அவர் இயக்கிய வர்மா படம் தயாரிப்பாளர்களுக்கு திருப்தி அளிக்காததால் வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் இயக்கப்படுகிறது.
இதனால் தனது அடுத்த படத்தின் மூலம் தனது முத்திரையை வலுவாகப் பதிக்க காத்திருக்கும் பாலா இந்த முறை தனது வெற்றி நாயகர்களில் ஒருவரான சூர்யாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
சூர்யா இப்போது சுதா கொங்குரா இயக்கும் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் பாலா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.