தலைவி படத்தில் இஷ்டப்பட்டு மகிழ்ச்சியுடன் நடித்தேன் - அரவிந்த் சாமி!

செவ்வாய், 23 மார்ச் 2021 (21:35 IST)
தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர்  வெளியீடு, இன்று  படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.  
 
இவ்விழாவில் பேசிய நடிகர் அரவிந்த் சாமி....
 
ஒன்றறை வருட பயணம் இது. இம்மாதிரியான படத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து எனக்கும் வாய்ப்பு தந்தற்கு, தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இப்படத்தில் வரும் அனவைருமே, வரலாற்று நாயகர்கள். இப்படிபட்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. 
 
இப்படத்தில் மிகப்பெரும் ஆளுமைகள் ஒன்றிணைந்து பணியாற்றீயுள்ளார்கள் அவர்களால் தான் இப்படம் சாத்தியமாகியுள்ளது. கங்கனா அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரகனி, தம்பி ரமையா, நாசருடன் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் இப்படத்தில் நடிக்க நான்  கஷ்டப்பட்டு உழைத்ததாக கூறினார்கள். 
 
ஒரு கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டும் என்று நமக்கு முதலிலேயே தெரியும் அதை செய்ய வேண்டியது நம் கடமை. நான் இஷ்டப்பட்டு மகிழ்சியுடன் தான் இப்படத்தை செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது நன்றி என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்