தலைவி எனக்கு ஒரு மிகச்சிறப்பான பயணமாக இருந்தது. படத்தை பற்றி அவர்கள் தந்த தகவல் தொகுப்புகள், பிரமிக்க தக்க வகையில் இருந்தது. நடிகை கங்கனா எனக்கு ஜெயலலிதா பற்றி அதிகம் தெரியாது, நான் எப்படி தயாராவது என்று கேட்டார்.
நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுயமதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா. கங்கனாவும் அதே போன்றவர் தான். தேசிய விருதை வென்றுள்ளார் தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.