கொரோனா காரணமாக திரையரங்குகளூக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் போக்கு அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரிலீஸுக்கு தயாராகி பெட்டியில் பல ஆண்டுகளாக தூங்கிய படங்களும் இப்போது ஓடிடி பக்கம் தாவுகின்றன. அந்த வரிசையில் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் உருவான வா டீல் படமும் ஓடிடி ரிலீஸுக்கு முயற்சி செய்துவருவதாகவும் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.