சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார்’ திரைப்படத்தின் அப்டேட் இன்று அல்லது நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று லோடிங் ஆகி கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெளிவரும் என்றும் தனது டுவிட்டில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது