50,000 வரை டிக்கெட் விலை… அனிருத் கொடுத்த ஷாக்?

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (12:06 IST)
அனிருத் ரவிச்சந்தர் தற்போது கோலிவுட்டில் அதிகம் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர்.


இந்த இளம் இசையமைப்பாளர் பீஸ்ட் மற்றும் விக்ரம் போன்ற 2022 இன் மிகப் பெரிய வெளியீடுகளுக்கான பாடல்களை உருவாக்கினார். அக்டோபர் 21, சென்னையில் இவரது லைவ் கான்சர்ட் நடத்தப்படுகிறது. இந்தியாவில் நடக்கும் லைவ் கான்சர்ட் முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். எனவே ரசிகர்களின் உற்சாகம் அதிகமாக உள்ளது.

அனிருத் ஒன்ஸ் அபான் எ டைம் என்ற தலைப்பில் இரண்டு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த டைட்டில் விக்ரம் படத்தின் ஹிட் பாடலைக் குறிக்கிறது. நவம்பர் 12 ஆம் தேதி கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவில் மைதானத்திலும், கோவையில் கொடிசியா மைதானத்திலும் நடக்க உள்ளது.

டிக்கெட் விலை, 1,000 ரூபாயில் தொடங்கி (சென்னையில் விற்றுத் தீர்ந்துவிட்டது) 50,000 ரூபாய் வரை ஏறுவது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' எனும் பெயரில் இந்த கான்சர்ட் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் உடன் இணைந்திருப்பதால், டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கு OTT இயங்குதளத்திற்கு மாறுபட்ட சந்தா திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த கான்சர்ட் அனிருத்தின் 10 வருடங்கள் திரையுலகு பயணத்தை நினைவுகூற நடத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்