தனுஷ் பட தயாரிப்பாளர் ஒரு முக்கிய அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:40 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல திங்க் மியூசிங் நிறுவனம் நேற்று கைப்பற்றியுள்ள நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு ஒரு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்பணிகள் முடிவடையவுள்ளன.
சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது படம் தியேட்டரில் வெளியாவது குறித்து தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து ஒரு டுவிட் பதிவிட்டிருந்தார். இதனால் படக்குழுவும், தியேட்டர் அதிபர்களும், ரசிகர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வரும் 2021 ஏப்ரலில் கர்ணன் படம் தியேட்டரில் ரிலீஸாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், கர்ணன் படத்தின் பாடல்கள் உரிமையை பிரபல திங்க் மியூசிக் பெற்றுள்ளதாக கர்ணன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கர்ணன் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் , நடிகர் தனுஷ் இதுகுறித்துத் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் நிச்சயம் பாடல்கள் பெரிதும் பேசப்படும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கர்ணன் படத்தின் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளதாகத் தயாரிப்பாளர் எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் டப்பிங்கி நடிகர் தனுஷ் தனது பெஸ்ட் டப்பிங்கை முடிந்துக் கொடுத்துள்ளதாகவும் தயாரிப்பாளர் எஸ்.தாணு புகழாரம் சூட்டியுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
டப்பிங்கின் போது, தனுஷ் டீ சர்டுடன் அமர்ந்திருக்கும் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.