சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள் இந்த ட்ரெய்லரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மரக்கட்டைகள் கடத்தல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மிக அபாரமாக நடித்துள்ளதாகவும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருப்பதாகவும் டிரைலரை பார்த்தவர்களால் கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது, ஆனால் அவர் எதிர்பாராத விதமாக நடிக்க முடியாததால் அவருக்கு பதிலாக பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மேலும், புஷ்பா படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும், இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.250 கோடி எனவும், இது சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு இணையானது எனவும் திரையுலகினர் கூறிவருகின்றனர்.