'துணிவு’ படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடக்கம்: பொங்கல் ரிலீஸ் உறுதி!

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (16:46 IST)
அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் உள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் இன்று துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர் 
 
முதல்கட்டமாக இந்த படத்தின் நாயகன் அஜித் டப்பிங் செய்வார் என்றும் அதனை அடுத்து மஞ்சுவாரியர் உள்ளிட்ட இந்த படத்தில் நடிக்க அனைவரும் அடுத்தடுத்து டப்பிங் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது
 
துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதால் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்